மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலுக்கு முழுவதுமாக தயாராகி விட்டது என்பதும் விரைவில் பிரச்சாரம் செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் பொன்னுத்தாய், கந்தர்வகோட்டை தொகுதிகள் சின்னத்துரை, கோவில்பட்டி தொகுதியில் சீனிவாசன், திண்டுக்கல் தொகுதியில் பாண்டி, அரூர் தொகுதியில் குமார் மற்றும் கீழ்வேளூர் தொகுதியில் நாகை மாலி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 6 பேர்களும் நாளை மறுநாள் திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் ஆறு பேர்களும் தங்களுடைய அரிவாள் சுத்தியல் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.