“மறுமுகம்” என்ற படத்தை எடுத்து வரும் புதுமுக இயக்குனர் எஸ்.கமல், தன்னுடைய பள்ளித்தோழர்கள் 60 பேர்களை தயாரிப்பாளர் ஆக்கியுள்ளார்.

ஊமை விழிகள் என்ற படத்தை எடுத்த இயக்குனர் ஆபாவாணன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் எஸ்.கமல். இவர் தற்போது டேனியல் பாலாஜி, அனூப், ப்ரீத்தி தாஸ் ஆகியோர் நடிக்கும் ‘மறுமுகம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.  இவருடைய பள்ளி, கல்லூரி தோழர்கள் 60 பேர்கள் தான் தயாரிப்பாளர்கள். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் டேனியல் பாலாஜி, கமல் நடித்த வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றாலம் பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வெறும் 35 நாட்களில் முழுப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். இந்த படத்திற்கு அகஸ்தியா என்பவர் இசையமைக்க கனகராஜ் என்பவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பெண்கள் மீது அளவுக்கு மீறி அன்பு வைத்தால் ஆண்களுக்கு ஏற்படும் விபரீதம் குறித்து இந்த படத்தில் விரிவாக அலசப்பட்டுள்ளதாக இயக்குனர் கமல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply