shadow

திருப்பதியில் தேவஸ்தானம் சார்பில் இலவச திருமணம். அரை மணி நேரத்தில் சான்றிதழ்.

tirupathiதமிழகம் உள்பட தென்னிந்தியாவில் திருமணம் செய்ய விரும்புபவர்கள் ஏழுமலையான் குடியிருக்கும் திருப்பதியில் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு. ஆனால் திருப்பதியில் திருமணம் செய்ய இதுவரை திருமண மண்டபம், புரோகிதர்கள், மேள தாளங்கள் என பல்வேறு செலவுகளை செய்ய வேண்டியதிருந்தது. நடுத்தர வர்க்க குடும்பத்தினர்களுக்கு இதுவே ஒரு பெரிய செலவாக இருந்தது. இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட திருப்பதி திருமலை தேவஸ்தானம் முன்வந்துள்ளது.

திருமணம் செய்ய விரும்புபவர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்தால் போதும். தேவஸ்தானம் சார்பில் அனைத்து செலவுகளும் செய்யப்பட்டு திருமணத்தை நடத்தி தரும். அதுமட்டுமின்றி திருமணம் நடந்த அரை மணி நேரத்தில் திருமண சான்றிதழும் அவர்களுக்கு வழங்கப்படும். இந்த தகவலை திருப்பதியில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்துள்ளார்.

நேற்று திருமலையில் நடந்த ‘கல்யாண திட்டம்’ என்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய சாம்பசிவராவ், மேற்கண்ட தகவலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply