சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள சிவாஜி கணேசனின் சிலையை அகற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

சென்னை மெரினாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் சிவாஜி கணேசனின் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை கடந்த 2006ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார்.

இங்கு வைக்கப்பட்ட சிவாஜியின் சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும், சிலையால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அதனால் இந்த சிலையை அகற்றவேண்டும் என வலியுறுத்தில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு பல மாதங்களாக விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ‘மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிலையை அகற்றி வேறு இடத்தில் மாற்றி வைக்கலாம்’ என கூறியுள்ளனர்.

இந்த தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக சிவாஜி சமூக நல பேரவை, தமிழ் சங்க பலகை அமைப்பு மற்றும் சிவாஜி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply