காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக வாஷிங்டனில் பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ஆலோசனை நடத்தினார்.
தீவரவாதிகள் காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ உடையில் வந்து தாக்குதல் நடத்தியதில் 13 வீரர்கள் பலியானார்கள். பலத்த காயம் அடைந்த நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு முறை பயணமாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங் இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ஆலோசனை நடத்தினார். வரும் 29ம் தேதி பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப்புடன் எல்லை பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.

Leave a Reply