முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேர் உள்பட மொத்தம் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் அதிரடி முடிவுக்கு இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்ததை அடுத்து இன்று காலை பிரதமரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர்களை விடுவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும், கொலையாளிகளை விடுவிக்கும் நடவடிக்கை தொடர்வதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 7 பேர் விடுதலை குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழக அரசின் முடிவு பற்றி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாஹன்வதியிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.