இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள பெரும் பரபரப்புகளுக்கு இடையே நேற்று பிரதமர் மன்மோகன்சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவருடைய பேட்டியில் அவர் அடுத்த பிரதமராக வருவதற்கு ராகுல்காந்திக்கு தகுதியிருப்பதாகவும், மோடி பிரதமராக வந்தால் நாட்டுக்கு அழிவு நிச்சயம் என்று கூறியுள்ளார்.
வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என தாம் நம்புவதாகவும், அதே வேளையில் இளையதலைமுறையினர்களுக்கு வழிவிட்டு, தான் மீண்டும் ஒருமுறை பிரதமராக ஆகும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் கூறினார்.
ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொலை செய்த மோடிக்கு என்னை விமர்சிக்கும் தகுதி இல்லை என்றும், மோடி பிரதமரனால் நாட்டுக்கு அழிவு நிச்சயம் என்று ஆவேசமாக கூறினார்
ஒன்பதரை ஆண்டுகாலத்தில் தாம் நேர்மையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதாகவும், பதவியை ஒருபோதும் தவறாக பயன்படுத்தியதில்லை என்றும் கூறினார்.
நான்கு மாநில தேர்தல் தோல்விக்கு விலைவாசி உயர்வே காரணம் என்றும், விலைவாசியை கட்டுபடுத்த காங்கிரஸ் அரசு எடுத்த முயற்சிகள் யாவும் உலக பொருளாதார சூழ்நிலை காரணமாக பயனளிக்கவில்லை என்றும் மேலும் கூறினார்.
பேட்டிக்கு இடையிடையே பிரதமர் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டும், ஆவேசமாகவும் கருத்து தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.