அஜித் படத்தில் பாடகியாக மாறிய மஞ்சுவாரியர்!

அஜித் படத்தில் பாடகியாக மாறிய மஞ்சுவாரியர்!

அஜித் நடித்த ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து உலகம் முழுவதும் இந்த படம் பொங்கல் தினத்தில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் 3 பாடல் இடம்பெற்று உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் அதில் ஒரு பாடலை நடிகை மஞ்சுவாரியார் பாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனத் டுவிட்டரில் ஜிப்ரான் இசையில் ’துணிவு’ படத்தில் ஒரு பாடலை பாடியது தனக்கு திரில்லிங் அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

அஜித், மஞ்சுவாரியர், வீரா, ஜான் கொகைன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார்.