shadow

manjapai-almost-equals-kochadaiyaan-745x483விமல், லட்சுமி மேனன் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன மஞ்சப்பை திரைப்படம், ரிலீஸான முதல்நாளில் கோச்சடையான் படத்தின் முதல் நாள் வசூலில் 70% வசூலாகி சாதனை புரிந்தது. சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பி மற்றும் சி சென்டர்களில் கோச்சடையான் படத்திற்கு நிகரான வசூலை பெற்று சாதனை புரிந்துள்ளது.

சூப்பர் ஸ்டாரின் படத்திற்கு நிகரான வசூலை விமல் படம் பெற்றுள்ளதால், விமலின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. மஞ்சப்பை படத்தில் ராஜ்கிரண் நடிப்பு நன்றாக பேசப்பட்டு வருவதால், இன்னும் இரண்டு வாரங்களுக்கு நல்ல வசூல் தரும் என விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மஞ்சப்பை வெற்றி காரணமாக விமல் அடுத்த படத்திற்கான சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அடுத்து லிங்குசாமி தயாரிப்பில் ஒரு படத்தில் விமல் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தின் வெற்றி காரணமாக லட்சுமி மேனனுக்கும் கோலிவுட்டில் மார்க்கெட்டில் மதிப்பு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply