செவ்வாய் கிரகத்திற்கு இந்தியாவால் அனுப்பப்பட்ட மங்கல்யான் செயற்கைக்கோள் நவம்பர் 5 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள், 40 நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையில் இணைந்தது.

இந்த செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையில் 20 முதல் 25 நாட்களுக்கு சுற்றியபின் செவ்வாய் கோளுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி பயணத்தை தொடங்கும் எனவும், அதன் சுற்றுப்பாதையில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி இணையும் எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 450 கோடி ரூபாய் செலவில் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோளில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மங்கல்யான் செயற்கைக்கோளால் சுற்றுப்பாதையை நிர்ணயிக்கப்பட்ட 1,00,000 கி.மீ அளவிற்கு உயர்த்திக்கொள்ள முடியவில்லையாம்.

இதுகுறித்து தெரிவித்த இஸ்ரோ, இந்த கோளாறு மிக விரைவில் சரி செய்யப்படும், இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply