மீண்டும் மாஸ்க் கட்டாயம்!! மீறுபவர்களுக்கு ரூ500 அபராதம்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதன்படி வீட்டை விட்டு வெளியில் வரும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் .

மேலும் வணிக வளாகங்கள், உணவகங்களில் கிருமிநாசினியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்; மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.