shadow

பெட்ரூமில் கஞ்சா வளர்த்த பிரபல பாடகிக்கு சிறை

பிரிட்டனை சேர்ந்த பிரபல பாடகி Paris Connolly அவர்கள் வீட்டில் சமீபத்தில் போலீஸார் ரெய்டு நடத்தியபோது, அவரது படுக்கையறையில் கஞ்சா செடிகளை அவர் வளர்த்து வருவதை கண்டுபிடித்துள்ளனர். இவற்றின் மதிப்பு இந்திய ரூபாயின்படி சுமார் ரூ.6.5 லட்சம் ஆகும்

இந்த கஞ்சா செடிகளை தான் வளர்ப்பதாக ஒப்புக்கொண்ட பாடகி தான் இதை வியாபாரத்திற்கு பயன்படுத்தவில்லை என்றும் தனது சொந்த உபயோகித்திற்காக மட்டுமே வளர்ப்பதாகவும் கூறினார்.

ஆனால் கஞ்சா பயிரிடுவது சட்டப்படி குற்றம் என்பதால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனியாக வாழ்ந்துவரும் இவருக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply