கொலையாளி என தவறுதலாக கைது செய்யப்பட்டவர் 28 வருடங்கள் கழித்து விடுதலை!

கொலையாளி என தவறுதலாக கைது செய்யப்பட்டவர் 28 வருடங்கள் கழித்து விடுதலை!

அமெரிக்காவின் பிலடெல்பியா என்ற பகுதியைச் சேர்ந்த வில்சன் என்பவர் கொலையாளி என குற்றம் சாட்டப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் நிரபராதி என தெரியவந்து விடுதலை செய்யப்பட்டார்

கடந்த 1989 ஆம் ஆண்டு நடந்த 3 பேர் கொலையில் டீன்ஏஜ் ஆக இருக்கும்போது வில்சன் என்பவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் தான் கொலையாளி என்று நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்

இந்த நிலையில் 28 ஆண்டுகள் கழித்து தற்போது அவர் குற்றவாளி இல்லை என்பது தெரிய வந்துள்ளது இதனை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்

வில்சனின் விடுதலை அடுத்து அவரது தாயார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து கடவுளுக்கு நன்றி கூறியுள்ளார் இருப்பினும் 28 வருடங்கள் வாழ்க்கையைத் தொலைத்த அவருக்கு தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் என அவருடைய உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை எடுத்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.