நடுரோட்டில் பிரசவம், தொப்புள்கொடியை கட்ட உதவிய செல்போன் சார்ஜ்!

நடுரோட்டில் பிரசவம், தொப்புள்கொடியை கட்ட உதவிய செல்போன் சார்ஜ்!

அமெரிக்காவில் உள்ள ஒரு பெண்ணுக்கு நடுரோட்டில் அவரது கணவரே பிரசவம் பார்த்ததாகவும் தொப்புள்கொடியை இழுத்து கட்ட அவர் செல்போனை பயன்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தனது கணவருடன் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார்

அப்போது அவருக்கு திடீரென நடுவழியில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து வண்டியை நிறுத்தி நடுரோட்டில் அவரது கணவர் அவருக்கு பிரசவம் பார்த்தார்.

குறிப்பாக தொப்புள் கொடியை இழுத்து கட்டுவதற்காக அவர் தன்னிடம் இருந்த செல்போன் சார்ஜரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது

இதன் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தனது மனைவிக்கு சிகிச்சை அளித்து உள்ளார் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது