shadow

பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் சிறுநீர் கழித்த வாலிபர்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒலவக்கோடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் கீழ் ஒரு ஏ.டி.எம். மையம் உள்ளது.

நேற்று காலை ஏ.டி.எம். சென்டருக்கு சென்ற வாடிக்கையாளர்கள் அதில் பணம் வரவில்லை என்று வங்கிக்கு புகார் செய்தனர். இதனையடுத்து வங்கி நிர்வாகம் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப குழுவை அனுப்பியது. அவர்கள் ஏ.டி.எம். எந்திரதை கழற்றி சோதனை செய்தனர்.

அப்போது பணம் வைக்கும் டிஸ்க்கில் ½ லிட்டர் அளவுக்கு திரவம் இருந்தது. ஏ.டி.எம். எந்திரத்துக்குள் எப்படி திரவம் வந்தது என்று புரியாத ஊழியர்கள் அதை தொட்டு முகர்த்து பார்த்தனர். அப்போது சிறுநீர் வாடை வீசியது. அந்த திரவத்தை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அது மனித சிறுநீர் என்று தெரியவந்தது. இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலையில் ஒரு வாலிபர் வந்தார். அவர் பணம் எடுக்க ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தினார். ஆனால் பணம் வரவில்லை. இதனால் அவர் பணம் வரும் துவாரத்தில் சிறுநீர் கழித்தார். இந்த காட்சிகள் அனைத்தும் அதில் பதிவானது.

இதனையடுத்து வங்கி அதிகாரிகள் இது குறித்து பாலக்காடு தெற்கு போலீசில் புகார் செய்தனர். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தில் சிறுநீர் கழித்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் வாலிபர் ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் பயன்படுத்தி இருந்ததால் அதில் அவரது தகவல்கள் பதிவாகி இருந்தது. அந்த தகவலின்படி அவர் அதே பகுதியில் உள்ள காடாங்கோடை சேர்ந்த தீனு (வயது 19) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த வாலிபரை மனப்புள்ளிகாவு என்ற இடத்தில் கைது செய்தனர். விசாரணையில் தீனு தான் பணம் கிடைக்காத ஆத்திரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் சிறுநீர் கழித்தேன் என்று கூறினார்.

Leave a Reply