சிறந்த நடிகையின் ஆஸ்கார் விருதை திருடிய மர்ம நபர் கைது

சிறந்த நடிகையின் ஆஸ்கார் விருதை திருடிய மர்ம நபர் கைது

நேற்று ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பிரான்சஸ் மிக்டார்மண்ட் அவர்கள் த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி என்ற படத்திற்காக பெற்றார். தன் வாழ்க்கையின் கனவு நனவாகிவிட்டதை நினைத்து மகிழ்ச்சி கடலில் மூழ்கிய பிரான்சஸ் மிக்டார்மண்ட் அவர்கள் சில நிமிடங்களில் துயரக்கடலில் மூழ்கினார்.

காரணம், அவர் வாங்கிய ஆஸ்கார் விருது திருடு போய்விட்டது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்த லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையினர் அதிரடியாக விசாரணையில் இறங்கி ஒருசில நிமிடங்களில் திருடனை பிடித்தனர்.

47 வயது பிரையண்ட் என்பவர்தான் இந்த ஆஸ்கார் விருதை திருடியதாக விசாரணையில் தெரியவந்தது. திருடுபோன விருது கிடைத்தவுடன் ஆனந்தக்கண்ணீருடன் பிரான்சஸ் மிக்டார்மண்ட் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.