shadow

பிக்பாகெட் திருடனை பிகினி உடையில் கைது செய்த பெண் போலீஸ் அதிகாரி

bikiniபோலீஸ் அதிகாரி என்று தெரியாமல் சூரியக்குளியலில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பிக்பாக்கெட் திருடன் ஒருவன் மாட்டிக்கொண்ட சம்பவம் சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நடந்துள்ளது.

ஸ்டாக்ஹோம் நகரில் 11 வருடங்களாக போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் வீரமான பெண்மணி மிக்கேலா கெல்னர் என்பவர் சமீபத்தில் தனது தோழிகளுடன் கடற்கரை மணலில் சூரியக்குளியலில் பிகினி உடையில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் திடீரென மிக்கேலா கெல்னரின் உடைமைகளை ஒரு திருடன் எடுத்துக்கொண்டு ஓடத்தொடங்கினார். இதை கவனித்த மிக்கேலா கெல்னர் பிகினி உடையிலேயே அந்த திருடனை விரட்டி பிடித்து கைது செய்தார். இந்த சம்பவம் ஸ்டாக்ஹோமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply