shadow

தமிழக தலைமைச்செயலாளர் வீடு சோதனைக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

தமிழக தலைமை செயலாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வதற்கு தமிழக முதல்வரே இதுவரை எந்தவித கருத்துக்களும் கண்டங்களையும் தெரிவிக்காத நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சியும் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த சோதனை குறித்து மம்தா பானர்ஜி கூறியபோது, ‘டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இப்போது, தமிழகத் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. இது பழிவாங்கும் நடவடிக்கை. நியாயமற்ற செயல். கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்க வருமான வரித்துறை முயற்சிக்கிறாதா” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த சோதனை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறைக்குக் கிடைத்த தகவலின் பெயரிலேயே தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்

இதேபோல் இந்த சோதனைக்கு ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். தமிழக தலைமை செய்லாளருக்கும், மம்தா பானர்ஜிக்கும் என்ன சம்பந்தம் என்பது புரியாமல் ஊடகங்கள் குழப்பம் அடைந்துள்ளன.

Leave a Reply