shadow

சிங்கப்பூர் – கோலாலம்பூர் புல்லட் ரெயில் திட்டம் ரத்து: புதிய மலேசிய பிரதமர் அதிரடி நடவடிக்கை

மலேசிய நாட்டின் புதிய பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற மஹாதிர் முஹம்மது அவர்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோ மீட்டர் தூர புல்லட் ரெயில் திட்டத்தை ரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

முன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஆரம்பித்து வைத்த இந்த திட்டத்தை புதிய பிரதமர் ரத்து செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய பிரதமரால் ரத்து செய்யப்பட்ட இந்த புல்லட் ரெயில் மூலம் சிங்கப்பூர் – கோலாலம்பூர் சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 90 நிமிடங்களில் சென்றடைய வாய்ப்பு இருந்தது.

வரும் 2026-ம் ஆண்டில் முடிக்கப்பட வேண்டும் என்ற முனைப்பில் 1400 கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பரிசீலனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோமீட்டர் தூர புல்லட் ரெயில் திட்டத்தை ரத்து செய்வதாகவும், இது இறுதி முடிவு என்றும் மஹாதிர் முஹம்மது இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply