shadow

மலேசிய தேர்தல் முடிவு: எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி

மலேசிய பாராளுமன்றத்திற்கு நேற்று நடந்த தேர்தலில் மகாதிர் முகம்மது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பர்றியது

மலேசியாவில் நேற்று மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை நடந்த தேர்தலில் 60% பேர் வாக்களித்தனர்

இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. ஆரம்பம் முதலே முன்னணியில் வந்து கொண்டிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டணி இறுதியில் 15 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றியதாகவும், ஆளும் கூட்டணி 54 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளதாகவும் மலேசிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஆட்சியை எதிர்க்கட்சி கூட்டணி கைப்பற்றியுள்ள நிலையில் கூட்டணியின் தலைவரான மகாதிர் முகம்மது விரைவில் புதிய மலேசிய பிரதமராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply