சீனு –  நிகேஷ்ராம் – அனன்யா நடிக்க பரதன் இயக்குகிறார்

ஸ்பெல் பௌன்ட் பிலிம்ஸ் I N C என்ற பட நிறுவனம் ,மலையாளத்தில்  பெரும்  வெற்றி பெற்ற “காக்டெயில்”  என்ற படத்தை தமிழில் தயாரிக்கிறார்கள் .

வித்தியாசமான படமாக பலராலும் பேசப்பட்டு அமோக வெற்றி பெற்ற “காக்டெயில்” படத்தை தமிழில் வாங்க பலர் போட்டி போட்ட நிலையில் ஸ்பெல் பௌன்ட் I N C பட நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கி விட்டது. மலையாள படங்களை தமிழில் ரீமேக் செய்யும் சீசன் போலிருக்கு.

ட்ராபிக் – சென்னையில் ஒரு நாள் என தயாரிக்கப்பட்டது.

தற்போது ஜன்னல் ஓரம், புலிவால் , உஸ்தாத் ஹோட்டல், மாலினி 22 பாளையங்கோட்டை போன்ற படங்களும் மலையாள இறக்குமதிகளே. அந்த வரிசையில் காக்டெயில் படமும் ரீமேக் செய்யப்படுகிறது. இன்னமும் பெயரிடப் படவில்லை.

சீனு – நிகேஷ்ராம் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.

கதாநாயகியாக அனன்யா நடிக்கிறார்.

முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவர் நடிக்கிறார் .

படத்தின் இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் பரதன் . இவர் தில் , தூள் , கில்லி , மதுர மற்றும்  தற்போது அஜீத் நடிக்கு வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தா.

அத்துடன் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தின் இயக்குனர்.

அவரிடம் படம் பற்றி கேட்ட  போது ……

திரைக்கதைக்கு சவாலான  படம் என்பதால் திரைக்கதையை உருவாக்கி கொண்டிருக்கிறோம். சிறப்பான தமிழ் படமாக இது வரும்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி  ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைகிறது.

Leave a Reply