கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆவது எப்போது?

இன்று காலை திடீரென கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் என்று வதந்திகள் வெளியானது

இந்த நிலையில் அந்த வதந்தி குறித்து மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்து கூறியிருப்பதாவது:

தலைவர் கமல்ஹாசன் அவர்கள் மருத்துவமனையில் இருந்து இன்னும் டிஸ்சார் ஆகவில்லை. ஆனால் நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

மேலும் வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் கால் அறுவைசிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.