தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா

பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபு தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.