அஜித் ஸ்டைலுக்கு மாறுகிறார் மகேஷ்பாபு

4அஜித்தும் மகேஷ்பாபுவும் இதுவரை இணைந்து நடித்ததில்லை எனினும் முதல்முறையாக இருவரும் ஒரே கேரக்டர்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தல அஜித் தற்போது ‘அஜித் 57’ படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் மகேஷ்பாபுவும் உளவுத்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும், இந்த கேரக்டர் கிட்டத்தட்ட ‘ஆரம்பம்’ அஜித் கேரக்டர் போலவே அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ராகுல்ப்ரித்திசிங் நடித்து வரும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மெயின் வில்லனாக நடிக்கின்றார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி மற்றும் பிரியதர்ஷ் காமெடி கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

மகேஷ்பாபு-முருகதாஸ் இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் சென்னை வரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply