shadow

ஹீரோவாக மாறிய ‘மங்காத்தா’ பட நடிகர்

அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய ‘மங்காத்தா’ மற்றும் விஜய் நடித்த ‘ஜில்லா’ போன்ற படங்களில் அடித்த மகத் தற்போது ஹீரோவாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு ‘யகன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தினேஷ் பார்த்தசாரதி இயக்கும் இந்த படத்திற்கு அஜ்மல் கான் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆக்‌ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படத்தில் மகத்துக்கு ஜோடியாக சென்னை கல்லூரி ஒன்றில் படித்து கொண்டிருக்கும் இருவர் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடித்து வரும் செப்டம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *