ஊரடங்கு உத்தரவை நீட்டித்த மூன்றாவது மாநிலம்

எந்த மாநிலம் தெரியுமா?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமருக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது

இந்த நிலையில் ஏற்கனவே ஒடிசா மாநிலம் ஏப்ரல் 30 வரையும், பஞ்சாப் மாநிலம் மே 1ம் தேதி வரையும் ஊரடங்கு உத்தரவை நீடித்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்றும் இது குறித்த தகவலை ஏற்கனவே பிரதமரிடம் கூறி விட்டதாகவும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் தெரிவித்துள்ளார்

Leave a Reply