ஒரு மாதத்தில் முதல்வர் பதவிக்கு ஆபத்து

பிரதமர் மோடி தலையிடுவாரா?

மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பதவிக்கு இன்னும் ஒரு மாதத்தில் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் இதுகுறித்து பிரதமர் தலையிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது

சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது., இதில் பாஜக மற்றும் சிவசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதிலும், தேர்தலுக்கு பின் திடீரென காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியைப் பிடித்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார்.

ஆனால் அவர் எம்.எல்.ஏஆக இல்லை என்பதால் அவர் ஆறு மாதங்களுக்கு எம்.எல்.ஏ ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது.

எனவே உத்தவ் தாக்கரே முதல்வராக நீடிக்க வேண்டும் என்று அமைச்சரவை கவர்னரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை கவர்னர் ஏற்பாரா? இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிடுவாரா? என்ற பரபரப்பு மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ளது

Leave a Reply