17 வயது சிறுமியை சொந்த தாய்மாமாவே 24 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 17 வயது சிறுமியை அவரது சொந்த தாய்மாமாவே 24 நாட்கள் அறையில் பூட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது

கடந்த ஜனவரி 14ஆம் தேதி 17 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில் அவருடைய சொந்த மாமாவே சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது

இதனையடுத்து போலீசார் தீவிரமாக இருவரையும் தேடி வந்த நிலையில் 17 வயது சிறுமியை கடத்திய தாய்மாமா ஒவ்வொரு இடமாக மாற்றிக் கொண்டு அந்த இடங்களில் பலமுறை அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்

இந்த நிலையில் அவுரங்காபாத் என்ற பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் வைத்து தாய்மாமனை போலீசார் கைது செய்து 17 வயது சிறுமியை மீட்டனர். அந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தன்னை பல இடங்களுக்கு மாற்றி மாற்றி கூட்டிச்சென்று அறையில் அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அழுது கொண்டே கூறினார்

இதனையடுத்து அவரது தாய்மாமா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 17 வயது சிறுமியை அவரது சொந்த தாய்மாமனே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply