shadow

maggiகடந்த சில மாதங்களுக்கு முன்னர் அனுமதிக்கபட்ட அளவை விட அதிகளவு வேதிப்பொருட்கள் கலந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு தமிழகம் உள்பட நாட்டின் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் தற்போது பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு  விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து  மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம் மும்பை நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை இன்று விசாரணை செய்த  மும்பை உயர் நீதிமன்றம், மேகி மீதான தடையை  நீக்கியும், மேகி நூடுல்ஸை விற்பனைக்கு அனுப்பும் முன்னர் புதிதாக ஆய்வுகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு காரணமாக மீண்டும் இந்தியாவில் மேகி நூடுல்ஸ் விற்பனை விரைவில் தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீட்டு மனுதாக்கதல் செய்யவுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகளின் வட்டாரம் கூறுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply