shadow

கோவிலில் ஆடை கட்டுப்பாட்டிற்கு தடை. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
temple
தமிழக கோயில்களில் கடந்த 1ஆம் தேதி முதல் புதிய ஆடை கட்டுப்பாடு ஒன்றை இந்து சமய அறநிலையத் துறை  உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக கோயில்களில் ஆண்கள் வேஷ்டி, சட்டை, பைஜாமா, குர்தாவும் பெண்கள் புடவை, தாவணி, சுடிதார் அணிந்து வரவேண்டும் என்றும் டிரவுசர், டிராக் பேன்ட்,  ஜீன்ஸ், டி சர்ட், டாப், லெக்கிங்ஸ் உள்ளிட்ட ஆடைகளை தவிர்க்க வேண்டும் என்ற உடை கட்டுப்பாடு குறித்த அறிவிப்பை ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த அறிவிப்பை அடுத்து சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர்  கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர்  கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர்  கோயில், வடபபழனி மற்றும் பழனி  முருகன் கோயில்,  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உள்பட பெரும்பாலான  பெரிய கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு  பலகைகள்  தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வைக்கப்பட்டன.

இந்த கட்டுப்பாட்டிற்கு பக்தர்கள் பக்தர்கள் தரப்பில் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி இருந்தது. இந்நிலையில், கோயில்களில் ஆடை கட்டுப்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஹரிதா, சுகந்தி ஆகிய பெண்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, “ஆடை கட்டுப்பாடு தனி மனிதரின் உரிமையில் தலையிடும் வகையில் உள்ளது” என்று மனுதாரர்  தரப்பிலும், கோயிலில்களில் ஆடை கட்டுப்பாட்டுக்கு தடை விதிக்க கூடாது என்று அரசு தரப்பிலும் வாதம் செய்யப்பட்டது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், கோயில்களில் ஆடை கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, இது தொடர்பாக பதில் அளிக்கும் படி இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply