தூத்துகுடி அணியை வீழ்த்தியது மதுரை

தூத்துகுடி அணியை வீழ்த்தியது மதுரை

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் மதுரை அணி, தூத்துகுடி அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

டாஸ் வென்ற தூத்துகுடி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 165 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஆனந்த் 44 ரன்களும், ஸ்ரீனிவாசன் 42 ரன்களும் எடுத்தனர்.

166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மதுரை அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மதுரை அணியின் அருண்கார்த்திக் 59 ரன்களும், கெளசிக் 38 ரன்களும் எடுத்தனர். அருண்கார்த்திக் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று திருச்சி, கோவை அணிகள் மோதவுள்ளன

Leave a Reply