மதுரை அண்ணா நகரை திடீரென சீல் வைத்த போலீசார்: பரபரப்பு தகவல்

மதுரை அண்ணா நகரை திடீரென சீல் வைத்த போலீசார்: பரபரப்பு தகவல்

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் முதன்முதலாக 54 வயது மதுரையைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்தார் என்பது தெரிந்ததே.

அவர் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் என்பதும் அவர் அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மதுரை அண்ணா நகரை சேர்ந்த ஒருவர் இறந்ததால் அவர் வசித்துவந்த அண்ணா நகர் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது

அந்தப் பகுதிக்குச் செல்ல 10 வழிகள் உள்ள நிலையில் 10 வழிகளையும் போலீசார் போலீசார் தற்போது மூடியுள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களிடமும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவி இருக்கிறதா என்று சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்

அதுவரை மதுரை அண்ணாநகர் பகுதி முழுவதும் சீல் வைக்கப்படும் என்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.