shadow

சென்னை ஐஐடி மாணவருக்கு அடித்த அதிர்ஷ்டம். ரூ.1.25 கோடி சம்பளத்தில் வேலை

iit-chennaiசென்னை ஐஐடி எம்.டெக் மாணவர் ஒருவருக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் ரூ.1.25 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. ஐஐடி வரலாற்றில் அதிக சம்பளத்தில் வேலைக்கு செல்லும் முதல் மாணவர் என்ற பெருமையை இந்த மாணவர் பெறுகிறார்

சென்னை ஐஐடி கல்லூரியில் இந்த ஆண்டு நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூவில் மொத்தம் 130 மாணவர்களுக்கு உலகின் பல நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது. இவர்களில் எம்.டெக் மாணவர் ஒருவருக்கு ரூ.1.25 கோடி சம்பளத்தில் உபேர் நிறுவனத்திலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரூ.93 லட்சம் சம்பளத்தில் ஒரு மாணவருக்கும், ரூ.85 லட்சம் சம்பளத்தில் ஆரக்கிள் நிறுவனத்தில் ஒரு மாணவருக்கும் வேலை கிடைத்துள்ளது.

ஐ.ஐ.டி ரூர்க் மற்றும் ஐ.ஐ.டி கவுஹாத்தி ஆகிய கல்லூரிகளில் இதற்கு முன்னர் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூவில் ரூ.1 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்ததே சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply