சென்னை பல்கலை.க்கு மேலும் விடுமுறை நீடிப்பு

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நாளை முதல் அதாவது டிசம்பர் 18ந் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டிசம்பர் 23 வரை மட்டுமே விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

நாடு முழுவதும் மாணவர்கள் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னையிலும் ஐ.ஐ.டி., லயோலா கல்லூரி, நியூ கல்லூரி ஆகிய கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் பல்கலைகழக வளாகத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக டிசம்பர் 18ந் தேதி முதல் வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். மேலும், பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவ, மாணவியர் உடனடியாக விடுதி அறைகளை காலி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *