சென்னை மெரினா கடற்கரையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் அங்குள்ள கடைகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள கடைகளை அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

நேற்று நடைபெற்ற இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடைகளை அகற்றுவதற்கு பதிலாக அவற்றை நெறிமுறைப்படுத்தலாம் என்றும், இது தொடர்பாக நடைபாதை கடைகள் தொடர்பான வழக்கில் டெல்லி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பின்பற்றி நடக்குமாறும் சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் அறிவுறை கூறியது.

இதனை சென்னை மாநகராட்சி வழக்கறிஞர் ஏற்றுக்கொள்வதாக கூறியதால் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. மெரினாவில் உள்ள கடைகளை நெறிமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த தீர்ப்பால் சென்னை மெரினா கடற்கரையில் கடை வைத்துள்ளவர்கள் நிம்மதி அடைந்தனர்.

Leave a Reply