shadow

விஷாலுக்கு ஜோடியாகிறார் மடோனா செபாஸ்டியன்.
vishal
‘கொம்பன்’ இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்த ‘மருது’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இராஜபாளையத்தில் முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டிரைலர் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவரவுள்ளது. மேலும் விஷால் தற்போது ‘துப்பறிவாளன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்குகிறார்.

இந்நிலையில் தற்போது விஷால் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன், சகலகலாவல்லவன் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரேமம் மற்றும் ‘காதலும் கடந்து போகும்’ நாயகி மடோனா செபாஸ்டியன் முதன்முதலாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply