காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் 10 கோடி ரூபாய் நஷ் ஈடு கேட்டு மத்திய பிரதேச முதலமைச்சர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த வாரம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்றார். இதற்காக நாளிதழ்களில் முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது.

அதில் பாஜகவை சேர்ந்த மத்திய பிரேதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் வீட்டில் பணம் எண்ணும் எந்திரம் இருப்பது போலவும் காண்டிராக்ட் பணிகளுக்கு அவரும் அவர் மனைவி சத்னாவும் பணம் வாங்கி குவிப்பது போலவும் எழுதப்பட்டிருந்தது.

இதற்கு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் அவரும் அவர் மனைவி சத்னாவும் நோட்டீசு ஒன்றை சோனியாவுக்கு அனுப்பினார்கள்.

Leave a Reply