‘மாநாடு’ தெலுங்கு, இந்தி ரீமேக்கில் நடிப்பது யார்?

சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர்கள் இந்த படத்தின் ரீமேக்கை வாங்க போட்டி போட்டு வருகின்றனர் என்பதும், அதேபோல் இந்த திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையையும் பெற பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு ரீமேக்கில் மகேஷ்பாபுவும், இந்தி ரீமேக்கில் ரன்வீர் கபூரும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.