shadow

maan-karate-shoot-plans-610x330

வரிசையாக மூன்று வெற்றிப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை தந்திருக்கின்றார் என்றுதான் சொல்லவேண்டும். வழக்கம்போல் ஹீரோ பில்டப் இல்லாமல் அப்பாவித்தனமாக காமெடி செய்திருப்பதால் படம் பிரமாதமாக வந்துள்ளது. லாஜிக் எல்லாம் பார்க்காமல் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து படத்தை கொடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர் திருக்குமரன்.

காட்டுக்குள் செல்லும் ஐந்து நண்பர்கள் ஒரு சித்தரை சந்திக்கின்றனர். அவரை கேலி செய்து கொண்டிருக்கையில் ஆயுத பூஜைக்கு மறுநாள் வரும் செய்தித்தாளை வரவழைத்து கொடுக்க முடியுமா? என உசுப்பேத்த, அந்த சித்தர் உண்மையிலேயே அந்த செய்தித்தாளை வரவழைத்து கொடுக்கிறார். அதில் பீட்டர் என்ற பாக்சரால் அந்த ஐந்து நண்பர்களுக்கு  ரூ.2 கோடி பரிசு கிடைத்துள்ளது என்ற செய்தி வெளிவந்துள்ளது. அதன் பின்னர் அந்த ஐந்து நண்பர்களும் பாக்சரை தேடி அலைந்து பாக்சிங் போட்டிக்கு அவனை தயார் செய்வதுதான் கதை.  இதில் பாக்சர் பீட்டர்தான் சிவகார்த்திகேயன்.

அறிமுகப்பாடலில் பில்டப் செய்வதோடு சரி, படம் முழுவதும் தனது வழக்கமான காமெடி, கலாய்த்தல் ஆகியவற்றை இதிலும் செய்திருப்பதால் படம் முழுவதும் செம காமெடியாக ஓடுகிறது. தியேட்டரில் பலருக்கு சிரித்து சிரித்து வயிறு வலித்திருக்கும். பாக்ஸிங்கில் டிரைனிங் எடுக்கும்போது மட்டுமில்லை, ஹன்சிகாவுடன் சீரியஸாக காதல் செய்யும்போது காமெடி செய்கிறார். அதிலும் க்ளைமாக்ஸில் பாக்ஸிங் நடுவராக வரும் சூரியிடம் சிவகார்த்திகேயன் செய்யும் காமெடியை பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

ஹன்சிகா இந்த படத்தில் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கிளாமர் தூக்கலாக இருக்கிறது. இந்த படத்தின் மூலம் ஹன்சிகாவுக்கு சிவகார்த்திகேயன் வைத்த பெயர் ‘நெய்க்குழந்தை’

சிவகார்த்திகேயன், ஹன்சிகாவை அடுத்த படத்தில் சொல்லிக்கொள்ளும்படி நடித்திருப்பவர் சதீஷ். இவரும் சிவகார்த்திகேயனும் செய்யும் டைமிங் காமெடிக்கு நல்ல வரவேற்பு.

ஏ.ஆர்.முருகதாஸின் ஒன்லைன் கதையை மிக அழகாக போரடிக்காமல் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் திருக்குமரன். வில்லன் வம்சி கிருஷ்ணாவை கடைசி நேரத்தில் மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளார் இயக்குனர். அனிருத்ஹ்டின் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பிரமாதமாக இல்லையென்றாலும், காமெடி படத்திற்கு இது போதும்.

முழுக்க முழுக்க பொழுது போக்குஅம்சங்கள் கொண்ட படம். குடும்பத்துடன் சென்று ஜாலியாக சிரிக்கலாம்.

Leave a Reply