shadow

3

ரூர்கியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எம்.டெக்., எம்.ஆர்க் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி:

எம்.டெக்., படிப்புக்கு பொறியியல் துறையில் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எம்.ஆர்க் படிப்புக்கு பி.ஆர்க் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் ரூ.400ம், எஸ்சி, எஸ்டி மற்றும் சிறப்பு பிரிவினர் ரூ.200ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை:

GATE நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலும், நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க ஏப்ரல் 9 கடைசி நாளாகும். கூடுதல் தகவல்களுக்கு www.iitr.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply