shadow

நம் ஊரில் விருதுகள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. சசிகலா கணவர் நடராஜன் பேச்சு

ஒருபுறம் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க சசிகலா காய் நகர்த்தி வரும் நிலையில் இன்னொரு புறம் அவரது கணவர் எம்.நடராஜன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரபரப்பான கருத்துக்களை பேசி வருகிறார். இந்நிலையில் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன் பழனிக்குமணன் அமெரிக்காவின் புலிட்சர் விருது பெற்றதற்காக நடந்த பாராட்டு விழாவில் நடராஜன் பேசினார்.

அவர் பேசியதாவது: தமிழ்நாட்டு மக்களே மிக சோகத்தில் இருக்கும் நிலையில் அதை தாங்கி நானும் என் குடும்பமும் மன உளைச்சளுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்கிறேன். எங்கும் செல்ல முடியாத நிலையிலும் இந்த விழாவுக்கு வருகிறேன் என்றால், தமிழனுக்கு கிடைத்த விருது என்பதால் அதனை சிறப்பிப்பதற்காக கலந்து கொண்டேன்.

இங்குள்ள பல பத்திரிகைகள் என்னவென்று விசாரிக்காமலேயே மிரட்டி எங்களை எழுதி வருகின்றனர். இதேபோன்று அமெரிக்காவில் மிரட்டல் கட்டுரைகள் எழுதினால் அங்கு நஷ்ட ஈடுகள் பெறலாம்.

நம்ம ஊரில் விருதுகள் எல்லாம் விலை கொடுத்து வாங்கப்படுபவை. ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை. என்னிடம் கூட ஒரு பத்மா, ரத்னா விருதை தருவதாக அணுகினார்கள். நான் அதனை தவிர்த்துவிட்டேன். நெடுமாறன் தந்தை காந்தியை வழிமறித்து தனது தங்க மோதிரத்தை கழட்டிக் கொடுத்துவிட்டு, காந்தியின் கோர்ட்டை வாங்கிப் போட்டவர். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் இந்த பழனிக்குமணன். நோபல் பரிசு உள்பட இன்னும் பல பரிசுகளை பெற தமிழகர்கள் முயற்சி செய்ய வேண்டும். தமிழ்ச் சங்கம் வளர்ந்த மதுரையில் ஒரு தமிழன் அமெரிக்காவில் விருதை பெறுவது தமிழுக்கும், தமிழ்ச் சங்கத்திற்கும் கிடைத்த பெருமை என்று அகில உலக சிறந்த மனிதர் பட்டம் வாங்கியவரான நடராஜன் பாராட்டி பேசினார்.

Leave a Reply