அனிதா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம். மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அனிதா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம். மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரியலூர் அனிதாவின் மரணம் அவருடைய குடும்பத்திற்கும், தமிழகத்திற்கும் ஏன் நாட்டிற்குமே மிகப்பெரிய இழப்பு என்றாலும் நீட் குறித்த விழிப்புணர்வு தற்போது முன்பைவிட பலமடங்கு அதிகமாகியுள்ளது. மாணவர்கள் தெருவில் இறங்கி போராட தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவருடைய குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். ஏற்கனவே அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியும், அவருடைய குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் தருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் தி.க. தலைவர் கி.வீரமணி ரூ.1 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

எத்தனை கோடி கொடுத்தாலும் அனிதாவின் இறப்பிற்கு ஈடாகாது என்றாலும் இந்த தொகை வறுமையின் பிடியில் இருக்கும் அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஒரு சிறு ஆறுதலாக இருக்கும்

Leave a Reply