திமுகவின் செயல் தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின்

திமுகவின் செயல் தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின்

திமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படும் என்று ஏற்கனவே எதிர்பார்த்த நிலையில் சற்று முன் அவர் திமுக கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் உடல்நலம் காரணமாக திமுக தலைவர் மு.கருணாநிதி பங்கேற்கவில்லை. திமுக ஆரம்பித்த 48 ஆண்டுகால வரலாற்றில் கருணாநிதி கலந்து கொள்ளாத ஒரே பொதுக்குழு கூட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply