மு.க.ஸ்டாலின் திடீர் டெல்லி பயணம். சசிகலாவுக்கு எதிராக காய் நகருத்துவாரா?
தமிழகத்தில் சசிகலா முதல்வர் பதவியை ஏற்கவுள்ள பரபரப்பு இருந்து வரும் நிலையில் இன்று திமுகவின் செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவரும் வரை தமிழகத்தில் முதல்வர் பதவியை சசிகலா ஏற்க அனுமதிக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்துவார் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன
சசிகலாவுக்கு எதிராக நேரடியாகவே காய் நகர்த்த மு.க.ஸ்டாலின் களமிறங்கியுள்ளது அதிமுகவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏற்கனவே முதல்வர் பதவியை ஏற்க தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்னும் அனுமதி கொடுக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.