shadow

lottery

உலகின் மிக அதிர்ஷ்டசாலியான தம்பதிகளாக விர்ஜினியா மாகாண தம்பதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டே வார இடைவெளியில் மூன்று முறை லாட்டரியில் பெற்று இந்த தம்பதி சாதனை படைத்துள்ளனர்.

Calvin மற்றும் Zatera Spencer என்ற தம்பதியினருக்கு கடந்த மார்ச் 12ஆம் தேதி பவர்பால் லாட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்தது. இதையடுத்து மார்ச் 26ஆம் தேதி மீண்டும் $50,000 பரிசு பணத்தை இதே தம்பதிகள் பெற்றனர். இந்த மகிழ்ச்சியில் அவர்கள் மூழ்கிய நேரத்தில் அதற்கு அடுத்த நாளே அதாவது மார்ச் 27ஆம் மீண்டும் இந்த தம்பதிகளுக்கு $1 மில்லியன் டாலர் லாட்டரி பரிசு விழுந்தது.

இரண்டு வார இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று முறை பரிசு பெற்றதால், லாட்டரி நிறுவனங்களே இந்த தம்பதிகளை பார்த்து அதிசயம் அடைந்தன.  இன்னும் ஏராளமான பரிசுகளை நாங்கள் வெல்வோம் என்று கூறுகின்றனர் Calvin மற்றும் Zatera Spencer தம்பதிகள்.

Leave a Reply