விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்தவர்கள் குறித்த வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய இத்தாலி நாட்டு நீதிமன்றம், அவர்களை விடுதலை செய்ததோடு, விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக கருத முடியாது என்று கருத்து கூறியுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ் தேசிய செயல்வீரர்களை சேர்ந்த சிலர், பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்றும், அவர்களுக்காக நிதி திரட்டினார்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லை என்று கடந்த 2011ஆம் ஆண்டு இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இத்தாலி அரசு மேல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. அந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பில், ”விடுதலைப் புலிகள் இயக்கம், ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை இயக்கமாகவே பார்க்கப்பட வேண்டும். அதை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாது. எனவே, கீழ் நீதிமன்றம் தீர்ப்பை தாமும் உறுதிப்படுத்துவதாகவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள்” என்பதால் அவர்களை விடுதலை செய்வதாகவும் தீர்ப்பு வழங்கினர். இதனால் இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

Leave a Reply