வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு: மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு: மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை அடுத்து நவம்பர் 20ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இதனால் நவம்பர் 20-ஆம் தேதி முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது