shadow

இன்று முதல் கனமழை.. காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுமா?

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியிருப்பதாகவும், இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் டிசம்பர் 8ஆம் தேதி முதல் சென்னை,புதுவை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.