shadow

தொடங்கியது லாரி ஸ்டிரைக்: நாடு முழுவதும் 65 லட்சம் லாரிகள் முடக்கம்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இன்று காலை 6 மணி முதல் லாரி ஸ்டிரைக் தொடங்கியதால் இந்தியாவில் சுமார் 65 லட்சம் லாரிகளும் தமிழகத்தில் சுமார் 4.5 லட்சம் லாரிகளும் ஓடவில்லை. இதனால் விலைவசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தங்கள் அச்சத்தை தெரிவ்த்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் குறித்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியபோது, ‘நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், டீசல் விலை உயர்வு மற்றும் தனிநபர் காப்பீடு தொகை உயர்வு, ஆகியவைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் செய்வதாகவும், தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்

இந்த வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கும் நிலை உள்ளதாகவும், எனவே மத்திய அரசு லாரி உரிமையாளர்களிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Leave a Reply