இந்தியா   முழுவதும்  அனைத்து  நீதிமன்றங்களிலும், லோக் அதாலத் என அழைக்கப்படும், மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவையில் உள்ள  39 லட்சம்  வழக்குகள்  நேற்று  விசாரணைக்கு  எடுக்கப்பட்டு  தீர்வு  காணப்பட்டது.
தமிழகத்தில் மட்டும்  ஒன்பது லட்சம் வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

விபத்து, காசோலை மோசடி, திருமண பந்தம், வங்கி கடன் என, பலதரப்பட்ட வழக்குகளில், சமரச பேச்சுவார்த்தை மூலம், தீர்வு காணப்பட்டது.

வழக்கு விசாரணையை, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர், நீதிபதி அக்னிஹோத்ரி,நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், சுதாகர், மணிக்குமார், உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், கலையரசன், மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின், உறுப்பினர் செயலரான, நீதிபதி அருள் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

Leave a Reply